Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை தினங்களில் அத்தியாவசிய உணவு பொருட்கள் சப்ளை செய்வதைத் தவிர்க்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலமும்  ரேஷன் அட்டையை அதிகாரப்பூர்வமான ஆவணமாக  அறிவித்துள்ளது. நமது அணைத்து பயன்பாட்டிற்கும் ரேஷன்கார்டு முக்கியமாக பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பொதுமக்களுக்கு ரேஷன் அட்டை மூலம் சென்றடைகிறது. ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது. அதற்கு மாறாக அந்த வாதங்களை வரும் ஞாயிற்றுக் கிழமைகள் வேலை நாளாக இருக்கிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை தங்கு தடையின்றி வழங்குவதற்காக மாதந்தோறும் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இயங்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை அன்று இடங்களிலிருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது. அதனை இறக்கி வைக்க ஊழியர்கள் செல்ல வேண்டி இருப்பதால் விடுமுறை கிடைக்காமல் சிரமப்பட்டு  வருவதாக கூறியுள்ளனர்.

அதனால் ரேஷன் ஊழியர்கள் விடுமுறை நாட்களில் கிடங்கிலிருந்து ரேஷன் கடைக்கு வரும் பொருட்களை அனுப்புவதை தவிர்க்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். ஊழியர்களின் இந்த கோரிக்கைக்கு தமிழக அரசு சரி செய்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதால் அந்த நாட்களில் பொருட்கள் சப்ளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென கூட்டுறவு சங்க பதிவாளர் இணைப்பதிவாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |