ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் ரேஷன் வாங்குவதற்காக வரும் மக்கள் பொருட்கள் இல்லை என்ற காரணத்தினால் நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு அலைச்சல் அதிகமாகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களை தெரிவிக்க பலகை கண்டிப்பாக வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில், வேலை நேரம், இன்றியமையா பண்டங்கள் இருப்பு விவரம், விநியோகம் செய்யப்பட்ட விவரம், விற்பனை விலை உள்ளிட்ட தகவல் இடம்பெற வேண்டும். மேலும், ஒரு குடும்ப அட்டைக்கு எவ்வளவு பொருட்கள் வழங்கப்படும் என்பது தொடர்பாகவும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.