Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. கூட்டுறவு துறை WARNING…!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.

இந்நிலையில்  ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்யுமாறும், தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளை, கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது. இதுபற்றி வெளியான அறிவிப்பில், “ரேஷன் கடைகளில் விற்கப்படும் கட்டுப்பாடற்ற பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெளிச்சந்தையை விட விலை குறைவாக இருக்க வேண்டும். பொருட்களுக்கு முறையாக ‘பில்’ வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |