தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்களை கட்டாயப்படுத்தி விற்க கூடாது என ஊழியர்களை கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது. பல ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை வாங்கினால் தான் இலவச அரிசி, கோதுமை வழங்கப்படும் என கட்டாயப்படுத்தி விற்பதாக புகார்கள் வருகின்றன. இனி கட்டாயப்படுத்தி பொருட்கள் விற்பது தொடர்பாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்களுடன் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.