தமிழகத்தில் தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கல்வி தொலைக்காட்சியில் வீடியோ பாடங்கள் ஒளிபரப்பாக உள்ளது. தனியார் பள்ளிகள் சிலவற்றில் இன்றும், சில பள்ளிகளில் நாளையும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. தீபாவளி விடுமுறைக்கு தங்களின் சொந்த ஊருக்கு சென்ற மாணவர்கள் அங்கிருந்தவாறே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.