சென்னையில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் இன்று மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து பிப்ரவரி 5ஆம் தேதி (இன்று) மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையில் நடைபெறும். இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பாலிடெக்னிக், டிப்ளமோ, கலை அறிவியல் பட்டம், பிஇ, பி டெக் என பலதரப்பட்ட கல்வித் தகுதி உடையவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். வயதுவரம்பு 30க்குள் இருக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பட்டதாரிகள் அனைவரும் வேலை வாய்ப்பைப் பெற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.