வரும் 18ம் தேதி முதல் தமிழகத்தில் மணல் லாரிகள் ஓடாது என்று அனைத்து எம்சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்தது. இது குறித்து வெளியான தகவலில், தமிழகத்தில் லாரிகளில்ஓவர் லோடு ஏற்றுவதை நிறுத்துவதற்காக அனைத்து மணல் லாரி உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகள் லாரி உரிமையாளர்களை ஓவர்லேடுகளை ஏற்றும்படி வற்புறுத்துகிறார்கள். இதற்காக 50000 முதல் கட்டாய மாமூலும் வசூலிக்கிறார்கள். ஓவர் லோடு ஏற்றுவதால் விபத்தில் சிக்கிய 114 லாரிகள் இயங்காமல் இருக்கிறது. விபத்தில் சிக்கிய லாரி மற்றும் ஓட்டுநருக்கான இழப்பீடு தர காப்பீடு நிறுவனங்கள் மறுக்கின்றன.
இதனால் இதை உரிமையாளர்கள் ஏற்க வேண்டியது உள்ளது. இதனால் நாங்கள் ஓவர் லோடு ஏற்ற மறுக்கிறோம். அதேபோல தமிழகத்தில் எம்சாண்ட் மட்டும் ஆற்று மணலை அங்கீகரிக்கப்படாத பல குவாரிகளில் இருந்து எடு. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதோடு அனைத்து லாரி உரிமையாளர்களுக்கும் லோடு கிடைப்பதில்லை. இந்த முறைகேடுகளை தடுக்கும் படியாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து வரும் 18ஆம் தேதி முதல் கால வரையறையற்ற வேலை நிறுத்தம் முடிவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.