தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுவரையிலும் தமிழகத்தில் 18 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி சனிக்கிழமை 19வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னை, நந்தம்பாக்கம் கொரனோ சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 950 படுக்கைகளில் 90 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் 350 படுக்கைகள் காவல்துறையினருக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.