Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வரும் 28 ஆம் தேதி….. அதிமுக வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு…..!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிமுக சார்பாக போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |