Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வழக்கம்போல் திறக்க உத்தரவு… உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நூலகங்களை வழக்கம்போல் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்க வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சௌந்தர்யா தொடர்ந்த வழக்கில், கிராம புற நூலகங்களே மிக முக்கியமானவை. நகர் புற நூலகங்களே திறக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புற நூலகங்கள் விரைவாக திறக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |