தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் விரைவாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பயிர் சேத விவரங்கள் குறித்து அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு, டிசம்பர் 28-ஆம் தேதி தமிழகம் வர உள்ளது. அந்த ஆய்வு முடிந்த பிறகு மத்திய குழுவின் அறிவுரைப்படி புள்ளிவிவரங்களை இறுதி செய்யப்பட உள்ளது. அதன்பிறகு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.