அரசு கேபிள் சந்தாதாரர்களுக்கு எஸ்.டி செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு கேபிள் சந்தாதாரர்களுக்கு மாத கட்டணமாக ரூபாய் 140 + 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், கூடுதல் தொகை வசூலித்தால் 1800-425-29 11 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு அரசு கேபிள் பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதால் மக்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.