நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கோவில்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த நாட்களில் பொது மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் மற்றும் தைப்பூசம் நாட்களில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.