Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வாடகை ரேஷன் கடைகளுக்கு…. அரசு புதிய அதிரடி…..!!!!!

தமிழநாட்டில் கூட்டுறவு துறை சார்பாக நடத்தப்படும் 33 ஆயிரம் ரேஷன் கடைகளில், 6,970 கடைகள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இந்த கட்டடங்களுக்கு வாடகையாக வருடத்துக்கு 18.62 கோடி ரூபாய் செலவாகிறது. இது வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் செலவை கட்டுப்படுத்த வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி வருடத்துக்கு 500 கட்டடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து 500 கார்டுகள் உள்ள கடைகளுக்கு 7 லட்சம் ரூபாயில் 440 சதுர அடியிலும், 500 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளுக்கு 10 லட்சம் ரூபாயில், 550 சதுர அடியிலும் சொந்த கட்டடம் கட்டும் அறிவிப்பை கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி சட்டசபையில் வெளியிட்டார்.
அதன்பின் கூட்டுறவு மற்றும் உணவு துறை ஆய்வு கூட்டத்தின் போது, வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளை அரசு கட்டடங்களுக்கு மாற்ற வேண்டும். மேலும் அனைத்து கட்டடங்களும் ஒரே வடிவமைப்பில் பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் விதமாக தனித்துவம் கொண்டதாக அமைய வேண்டும் என்று அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தற்போது தமிழக பாரம்பரிய கட்டட கலை நயத்தை பிரதிபலிக்கும் விதமாக ஒரே வடிவமைப்பில் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அவ்வாறு புதிதாக கட்டப்படும் ரேஷன் கடைகளில் தானிய மூட்டைகள் சேமித்து வைக்க போதிய இட வசதி இருக்கும். அதுமட்டுமல்லாமல் கார்டுதாரர்களுக்கு காத்திருப்பு அறை, மாற்று திறனாளிகள், முதியவர்கள், பெண் பணியாளர்கள் எளிதில் அணுகும் அடிப்படையில் இருக்கும். மேலும் மழை நீர் தேங்காதபடி சாய்வான மேற்கூரையுடன் அமைக்கப்பட இருக்கிறது. அதன்பின் கழிப்பறை வசதியும் இருக்கும் என்று கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |