தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் நாளை முதல் 5 நாட்களுக்கு விஜய் ரசிகர்கள் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார்.
இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகள் முதல் 5 நாட்களுக்கு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு, விஜய் ரசிகர் மன்றத்தினரிடம் ஒப்படைத்து விட்டனர். அதன் மூலம் அந்த ஐந்து நாட்களும் விஜய் ரசிகர்கள் அவர்களது குடும்பத்தார் மட்டுமே படம் பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது.