Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விடுமுறை கிடையாது… பரபரப்பு உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதிலும் சில கட்சிகள் தொகுதி பங்கீடு பற்றிய தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் மாநிலம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்துவருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் போலீசாருக்கும் விடுமுறை நிறுத்தி வைக்கப்படுகிறது. அவசர அவசியம் கருதியும், துக்க நிகழ்ச்சிக்காக மட்டும் விடுமுறை எடுக்க முடியும். அதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |