தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
மேலும் வாரத்தில் 6 நாட்கள் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆலோசித்து வருகிறது.