நாடு முழுவதும் பட்டினி இல்லா நிலையை உருவாக்குதற்கு சமூக சமையல் கூடங்களை அமைக்க வலியுறுத்தி வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் தமிழகத்தில் 4 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்தது குறித்து உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, 654 சமூக சமையல் கூடங்கள் “அம்மா உணவகம்” எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்திலுள்ள கோவில்களில் சுமார் 66 ஆயிரம் நபர்களுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒருவர் கூட பசியுடன் இரவு உறங்க போவதில்லை” என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது..