தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில்களில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் கோவில்களில் அலைபேசி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 48 முதுநிலை கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள திருக்கோவில்களில் சிறப்பு தரிசனம் கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்துள்ளார். கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி எந்தெந்த கோவில்களில் கட்டணத்தை ரத்து செய்யலாம் என்று கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.