Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விற்கும் 2 லட்சம் லாரிகள்…. அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்….!!!

சுங்க கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 8 நாட்களில் 8 ரூபாய் ஏற்றப்பட்ட டீசல் விலையை அடுத்த 21 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.இதையடுத்து டீசல் விலை மற்றும் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளதை தொடர்ந்து தமிழகமெங்கும் 2 லட்சம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சேலம் முதல் அசாம் வரை செல்ல 25 ஆயிரமாக இருந்த சுங்க கட்டணம் தற்போது 35 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் டீசல் செலவும் 5 ஆயிரம் அதிகரித்துள்ளது. தினந்தோறும் டீசல் விலை அதிகரித்து வருவதால் லாரி வாடகை உயர்த்துவதும் சிக்கல்தான். சரக்குகள் தேங்காமல் மற்றும் விலையை உயர்த்தாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இப்படி லாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தால் மக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |