தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது.
ஆனால் இதில் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து செல்ல எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்த பிற மாவட்டங்களுக்கு எடுத்து செல்ல உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவை – 9865678453, செங்கல்பட்டு -9940760038, 9444178928, காஞ்சிபுரம் – 9629951863, 9176647302, மதுரை – 9443004662, 9486501100, சேலம் – 9443363660, 8754034020, தஞ்சை- 9944669922, 9943055896 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.