Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தத்கல் திட்டத்தின் கீழ் உரிய தொகை செலுத்தி 15 எச்பி வரை உடனடியாக விவசாய மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரி கூறுகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு சாதாரண முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுய நிதி திட்டம் 25 ஆயிரம்,50 ஆயிரம் அடிப்படையில் மின் இணைப்பு பெறுவதற்கு 2018ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை தொடக்க தொகை 500 ரூபாய் செலுத்தியவர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2014 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை சாதாரண வரிசை திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு சுய நிதி திட்டத்தில் மின் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது தத்கல் சுய நிதி திட்டத்தில் விண்ணப்பித்து, மின் பளுவுக்கு ஏற்ப உரிய திட்ட தொகையை செலுத்தி 15 எச்பி வரை உடனடியாக மின் இணைப்பு பெற்றுக்கொள்ள முடியும். இதுதொடர்பாக உரிய விவரங்கள் பெற தகுந்த ஆவணங்களுடன் அந்தந்த பகுதி செயற்பொறியாளர்களை உடனடியாக அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |