தமிழகம் முழுவதிலும் உள்ள வருவாய்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் உட்பட மாநிலம் முழுவதும் 312 வட்டங்களில் 12,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.