Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் +1 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிக்கல்வி பாடதிட்டத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை இரு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனால் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் அடிப்படையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரியில் நடந்து முடிந்தது. தற்போது 2-ம் கட்ட தேர்வு இம்மாதம் தொடங்க இருக்கிறது. ஆனால் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரையிலும் எந்த தேர்வும் நடத்தப்படவில்லை.

அதுமட்டுமின்றி பிளஸ்-1 பயிலும் மாணவர்கள் கடந்த வருடம் 10ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதாமல் “ஆல் பாஸ்” செய்யப்பட்டனர். ஆகவே அவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகும் அடிப்படையில் திருப்புதல் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான அறிவிப்பை அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். அந்த வகையில் பிளஸ்-1 திருப்புதல் தேர்வானது ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதாவது ஏப்., 5, 6, 7, 8, 11, 12, 13ஆம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |