தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
இதனால் மாணவர்களுக்கு கற்றல் மற்றும் கற்பித்தலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனை களைய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனியாக கையேடு தயாரித்து ஆசிரியர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில்,
1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Creativity-ஐ ஊக்கப்படுத்தும் வகையில், Greeting Card தயாரித்தல், படம் வரைதல் போன்ற Assignments தரப்பட வேண்டும். 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு வரைதல் போன்ற Assignments தரப்பட வேண்டும். 9, 10-ம் வகுப்பினருக்கு புத்தக விமர்சனம் போன்ற Assignments தரப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் இருந்து CEO-க்களுக்கு வழங்கப்படும் Assignment-களையே, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தர வேண்டும்.
கற்றல் – கற்பித்தல் இடைவெளி இருப்பதாக தெரியவந்துள்ளதால், அதை நிவர்த்தி செய்யவே Assignment வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட Assignments தரப்படும் போது, அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்துமுடிக்குமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கல்வித்துறை அறிவுறுத்தல். மாணவர்களுக்கு வழங்கப்படும் Assignments விவரம், மாணவர்கள் சமர்ப்பிக்கும் விவரம் போன்றவற்றை உரியமுறையில் பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.