Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இந்த வருடம் கண்டிப்பான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டிலுள்ள மாணவர்கள் முனைப்புடன் படித்து வருகின்றனர். இந்நிலையில் பொது தேர்வுகளுக்கான தேதிகள் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது .

அந்த வகையில் 10, 11, 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்குகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5- மே 28ம் தேதி வரை நடைபெறும். அதன்பின் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6- 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9- 31ம் தேதி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து ஜூன் 23 ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். பொதுத் தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்து, அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 1-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 1- 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 வரை வகுப்புகள் நடைபெறவுள்ளன. அதன்பின் கோடை விடுமுறையானது விடப்படும். மீண்டும் ஜூன் 13ம் தேதி வகுப்புகள் தொடங்க இருக்கிறது. அதேபோன்று 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்புக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட இருக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |