Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10ஆம் தேதி முதல் – முதல்வர் அதிரடி அனுமதி

தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அனுமதி அளித்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 வயதுக்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுக்கும் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் உடற்பயிற்சி நிலையங்கள் இயங்குவதற்கான அனுமதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி இருக்கின்றார்.

இதற்கு முன்பாக முதலமைச்சரை சந்தித்து தமிழ்நாடு ஜீம் உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை  இந்தக் கோரிக்கையை வைத்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் அனுமதி கொடுக்கப் பட்டிருக்கிறது. இதற்கான நிறைய வழிகாட்டல்கள், செயல்முறை வெளியிடப்படும் என்றும், இதனை   கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Categories

Tech |