Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு……!!!!!

தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர். அதன்படி 10, 11, 12,-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

இந்நிலையில் மாணவர்களின் திறனை மேம்படுத்தவே 10-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தொழிற்கல்வி தேர்வு அறிவிக்கப்படவில்லை. தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் அவசியமில்லை என கூறியுள்ளது. மேலும் அந்த மதிப்பெண் பொதுத்தேர்வு மதிப்பெண்ணில்  கணக்கில் வராது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |