Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் வழக்கம்போல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. அவற்றில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6- 30 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்ற வகுப்புகளுக்கு பாட வாரியாக கால அட்டவணை வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் மாணவர்களின் பாடச்சுமையை கருத்தில்கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. நடப்பு ஆண்டும் பொதுத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் மார்ச் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வர்களும் விண்ணப்பிக்க தொடங்கினர். இந்த சூழ்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான அனுமதி சீட்டு வெளியாகியுள்ளது. ஆகவே தேர்வர்கள் இணையதளம் மூலம் நாளை பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யும் முறைகள்:

# முதலாவதாக http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

# அதில் “HALL TICKET” என்பதை கிளிக் செய்து “SSLC PUBLIC EXAMINATION MAY 2022 – HALL TICKET DOWNLOAD” என்பதனை தேர்ந்தெடுக்கவும்.

# அடுத்து வரும் பக்கத்தில் விண்ணப்பஎண் (Application Number) / நிரந்தர பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினை பதிவிடவும்.

# மே 6 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |