தமிழகத்தில் இந்த வருடம் 11 நாட்கள் அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு இந்த வருடம் 11 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உணவுத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி ஜனவரி 14, ஜனவரி 26, ஏப்ரல் 14, மே 1, மே 14, ஆகஸ்ட் 15, செப்டம்பர் 10, அக்டோபர் 2, அக்டோபர் 15, நவம்பர் 4, டிசம்பர் 25 ஆகிய 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி இந்த நாட்களுடன் வார விடுமுறை நாட்களிலும் நியாயவிலைக் கடைகள் இயங்காது என்று தெரிவித்துள்ளது.