Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 14 வகையான மளிகை பொருட்கள்…. விநியோகம் தொடங்கியது….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. அதில் முதல் தவணை கடந்த மாதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது தவணை ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

அதன்படி, இரண்டாவது தவணை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று முதல் இம்மாத இறுதிவரை ரேஷன் கடைகளில் பெறலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒரு ரேஷன் கடைகளில் 75 முதல் 200 பேருக்கு தினசரி மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும். மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்க யாராவது பணம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகைப் பொருள்கள் விநியோகம் தொடங்கியது. மேலும் கொரோனா நிவாரண தொகை இரண்டாவது தவணையாக 2,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

Categories

Tech |