தமிழகத்தில் இன்று மட்டும் 16 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று 4,538 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 1,243 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 83,377ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 1,10,807பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 79பேர் உயிரிழந்ததால் கொரோனா பலி 2,315ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,243 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 83,377ஆக உள்ளது. இன்றைய பாதிப்பில் 75 பேர் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். அதே போல தமிழகத்தில் குணமடைந்தோர் வீதம் 68.86% ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 14,923 பேர் உட்பட தமிழகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 47,782ஆக உள்ளது.
தமிழகத்தில் 55 அரசு பரிசோதனை மையமும், 54 தனியார் பரிசோதனை மையமும் என மொத்தம் 109 பரிசோதனை நிலையங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் இன்று மட்டும் 16 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 20 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்டவாரியாக உயிரிழப்பு:
சென்னை – 36
செங்கல்பட்டு – 8
திருவள்ளூர் – 5
கோவை – 5
ராமநாதபுரம் – 4
மதுரை – 4
தி.மலை – 4
வேலூர்-3
திருச்சி -3
தூத்துக்குடி – 1
தேனி-1
விழுப்புரம்-1
காஞ்சிபுரம் – 1
சிவகங்கை – 1
ராணிப்பேட்டை-1
திருப்பத்தூர் -1