Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 165 அரசு உயர்நிலைப் பள்ளிகள்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகம் முழுவதிலும் 165 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கட்டமைப்பில், அருகே  உள்ள பள்ளி விதிகளின்படி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வசதியில்லாத குடியிருப்புகளில், தற்போது உள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் செயல்பாடு வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.

அதன்படி  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் 2022-2023 ஆம் ஆண்டு வரைவு திட்டத்தில் தற்போது உள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும், உயர்நிலை பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் தேவையின் அடிப்படையில் கருத்துக்களை பெற்று அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த அடிப்படையில் 2019-2020 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்துவது குறித்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் 165 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பள்ளிகளை மீண்டும் ஆய்வு மேற்கொண்டு 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான தரம் உயர்த்த கோரும் பள்ளிகளின் பட்டியலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

Categories

Tech |