தமிழகத்தில் 17 இடங்களில் சுற்றுப்புற காற்று தர அளவீடு செய்யும் நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து மாவட்டங்களிலும் காற்று தர நிர்ணய குறியீட்டு அளவீடு கருவிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதோடு சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு என்கின்ற திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதில் முதல்கட்டமாக 17 இடங்களில் தொடர் கண்காணிப்பு காற்று தர அளவீடு நிலையங்கள் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் காற்று மாசுபாடு குறித்த முழு தரவுகளையும் உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories