Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 2 வாரத்திற்குள்… முதல்வர் திடீர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு அலுவலர்கள்மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவரும் இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். உணவகங்கள், தொழிற்சாலைகள், இறைச்சி கூடங்கள் மற்றும் சந்தைகளில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |