தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் மக்கள் தேவைகளை முன்னரே கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டு வார காலத்திற்கு இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்கான நலத் திட்ட உதவிகள் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இருளர் மற்றும் நரிக்குறவ மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, பரிசுகள் கொடுத்து அவர்களை சுய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.