Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் – தமிழக அரசு அதிரடி முடிவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புதிய முறையில் குழு பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

குழு பரிசோதனை முறை என்பது பத்து பேருடைய ரத்த மாதிரிகளை சேகரித்து ஒரே முறையில் பரிசோதனை செய்வதாகும். இதன் மூலம் சோதனை முடிவில் கொரோனா இல்லை எனில் 10 பேருக்கான முடிவு ஒரே நேரத்தில் கிடைத்துவிடும். கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில், மீண்டும் அவர்கள் தனித்தனியாக பரிசோதனை செய்யப்படுவார்கள். இந்த புதிய முறையால் அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையிலேயே தற்போது இதனை தொடங்குவதற்கு தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

கொரோனவை கண்டறிய வேண்டும் எனில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ச்சியாக தெரிவித்திருக்க கூடிய நிலையில் இந்த குழு பரிசோதனை மூலமாக தமிழகத்தில் மேலும் பரிசோதனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக குறைவாக கொரோனா தொற்றுள்ள புதுக்கோட்டை, திருநெல்வேலி, விழுப்புரம், திருவாரூர், தென்காசி, அரியலூர், நாகை, பெரம்பலூர், சேலம், கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இந்த முறை தொடங்கப்பட உள்ளது.

குறிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன் களப்பணியாளர்களாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள்,  தூய்மைப் பணியாளர்களுக்கு இந்த சோதனை திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலமாக வருபவர்களுக்கும், தொழிற்சாலைப் பணியாளர்கள் ஆகியோருக்கும் குழு பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக 21 மாவட்டங்களுக்கும் சுற்றைக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Categories

Tech |