234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்ட அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வேலைக்கு செல்கின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் 300க்கும் மேற்பட்ட தனியாக நிறுவனங்கள் பங்கு பெற்ற இளைஞர்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது”ஓராண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்பது மிகப்பெரிய சாதனை. கடந்த 15 மாதங்களில் 882 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இளைஞர்களின் தகுதிக்கும், திறமைக்கும் வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்” என்றார்.