தமிழகத்தில் மொத்தம் 59,152 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் 2,631 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் தான் செயல்படுத்தி வருகின்றனர் என்று யுனெஸ்கோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் இந்தியாவிற்கான 2021 கல்வி அறிக்கையில், தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் தான் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அதன்படி பின்பற்றப்படவில்லை.
மேலும் தமிழகத்தில் 61% பள்ளிகளில் மட்டுமே நூலக வசதியும், 24% பள்ளிகளில் மட்டுமே இன்டர்நெட் வசதியை மற்றும் 1% பள்ளிகள் மட்டுமே தகவல் தொழில்நுட்ப கூடமும் உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கன்வாடி ஆசிரியர்கள், 1.96% தொடக்கப்பள்ளியில் 0.54% ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளியில்0.24% ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் 0.13 சதவீத ஆசிரியர்கள் குறைந்த தகுதி உடையவர்களாக உள்ளனர்.
இதுகுறித்து கல்வியாளர் கஜேந்திரன் பாபு கூறியது, தமிழகத்தில் தற்போது ஆசிரியருக்கான தேர்வு நடத்தப்பட்டு தான் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனால் இந்த அறிக்கையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சேவ்லைப் பவுண்டேஷன் பள்ளிக்கு செல்லும்போது பாதுகாப்பு பயணம் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் சென்னையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் வாகனங்கள் பாதுகாப்பற்ற முறையில் செயல்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பள்ளிக்கு செல்வதற்கு நடைபாதை போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.