Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் – வெளியான முக்கிய தகவல் …!!

தமிழக்தில் இன்று மட்டும் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பதற வைக்கின்றது.

தமிழகத்தில் இன்று மட்டும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,68,285ஆக அதிகரித்தது. 6,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,08,784 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,023 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,04,027 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 55,152 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 4,349 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 28 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 77.80% குணமடைந்துள்ளனர். தமிழக்தில் நேற்று முன்தினம் 24 மாவட்டங்களிலும்,  நேற்று 28 மாவட்டங்களிலும் இன்று 27 மாவட்டங்களிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்கள்:

சென்னை- 23

கன்னியாகுமரி- 9

செங்கல்பட்டு- 8

கோயம்புத்தூர்- 7

திருநெல்வேலி- 6

திருவள்ளூர்- 6

காஞ்சிபுரம்- 6

திருவண்ணாமலை- 4

தேனி- 4

தென்காசி- 4

மதுரை- 4

விருதுநகர்- 3

கடலூர்- 3

சேலம்- 3

ராமநாதபுரம்- 2

திருப்பத்தூர்- 2

திருப்பூர்- 2

திருச்சி- 2

வேலூர்- 2

நாகப்பட்டினம்- 1

நாமக்கல்- 1

புதுக்கோட்டை- 1

தர்மபுரி- 1

திண்டுக்கல்- 1

சிவகங்கை- 1

தஞ்சாவூர்- 1

விழுப்புரம்- 1

Categories

Tech |