Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 27 மாவட்டம் – அதிர வைத்த ரிப்போர்ட் …!!

நேற்று மட்டும் தமிழகத்தில் 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்தது. 6,020 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,38,638 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,09,117  பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,654 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Image

கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 80.38 % குணமடைந்துள்ளனர். 119 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 4,927 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 68,179 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 31,09,708 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ( 37 ) தொற்று உறுதி செய்யப்பட்டு, 27 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்ட மாவட்டங்கள்:

கோயம்புத்தூர் – 13

விருதுநகர் 13

சென்னை – 12

மதுரை – 6

தூத்துக்குடி – 6

திருவள்ளூர் – 6

வேலூர் – 5

திருவண்ணாமலை – 5

வேலூர் – 5

செங்கல்பட்டு – 5

காஞ்சிபுரம் – 5

ராணிப்பேட்டை – 4

சிவகங்கை – 4

திண்டுக்கல் – 4

கன்னியாகுமரி – 4

திருநெல்வேலி – 4

தஞ்சாவூர் – 3

திருப்பத்தூர் – 3

தேனி – 3

நாமக்கல் – 2

ராமநாதபுரம் – 2

திருப்பூர் – 2

திருச்சி – 2

கடலூர் – 2

தர்மபுரி – 1

அரியலூர் – 1

ஈரோடு – 1

தென்காசி – 1

 

Categories

Tech |