வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகாவில் புறம்போக்கு நிலத்தில் அரசு அனுமதி பெறாமல் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை எடுக்கும்படி தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். ஆனால் வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி ஏற்கனவே உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் சிலைகளை வைக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளதால் சிலைக்கு எடுப்பதில் தவறில்லை என்று அவர் கூறியதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகள் தமிழகத்தில் பொது இடங்கள் சாலைகள் புறம்போக்கு நிலங்கள் மற்றும் அரசு இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட தலைவர் சிலைகளை மூன்று மாதத்திற்குள் கண்டுபிடித்து அதனை அகற்ற வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் அரசு அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலையை எடுத்து பூங்கா போன்ற இடங்களில் வைக்க வேண்டும். இந்த உத்தரவை 6 மாதங்களில் அமல்படுத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து தனது வாதத்தை முடித்து வைத்தது.