Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 3 வாரம் முழு ஊரடங்கு?…. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 வாழ்வாதார உதவித்தொகை….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 6 ஆம் தேதி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முதலில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு கடுமையான நடைமுறைப்படுத்தி பின்னர் இன்னொரு வாரம் ஊரடங்கு செயல்படுத்தினால் கொரோனாவால் கட்டுக்குள் வந்துவிடும். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 5000 வாழ்வாதார உதவியும், இலவச உணவு தானியங்களும் வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |