தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1 மணி நேர நிலவரப்படி தமிழகம் முழுவதும் 35.34 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. மாநகராட்சிகளில் 28.50 சதவீதம், நகராட்சிகளில் 41.11 சதவீதம் மற்றும் பேரூராட்சிகளில் 46.92 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 50.58 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னையில் 23.42 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளது.