Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 4 நாட்கள் விடுமுறை…. கூடுதல் பேருந்துகள்…. அரசு அதிரடி அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் சென்னையில் உள்ள வெளியூர் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செல்ல ஏதுவாக கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் தேவைக்கு ஏற்றது போல் அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.

அதனால் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. படுக்கை வசதிகளுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகள், சொகுசு பேருந்துகள் இதில் அடங்கும். 300 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்கள் டிக்கெட்டை www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

 

Categories

Tech |