Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 4,038 பணியிடங்கள்….. வெளியான செம அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறையில் நவம்பர் 15ஆம் தேதிக்குள் புதிதாக 4,038 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: “தற்கொலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை குற்றங்கள், தற்கொலைகள், விபத்துக்கள் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது.

அதில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 333 தற்கொலைகள் நடந்துள்ளது. இந்த தற்கொலைகளில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 18,925 தற்கொலைகள் அரங்கேறியுள்ளது. தற்கொலைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருந்து கடைகளில் தனி நபராக வந்து சாணி பவுடர், எலி பேஸ்ட் கேட்பவர்களுக்கு மருந்துகள் தரக்கூடாது. மேலும் தமிழகத்தில் சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 4,038 பணியிடங்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் நிரப்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன்” அறிவித்தார்.

Categories

Tech |