Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனையின் முடிவில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் பொது தேர்வு நடைபெறும் என்றும் அதற்கு இடையில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5 முதல் 11 ஆம் தேதி வரை மதிப்பீட்டு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனால் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட அளவில் ஜனவரி 5ஆம் தேதி முதல் நடைபெற இருந்த மதிப்பீடு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |