Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு…. முதல்வரின் சூப்பர் திட்டம்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான  ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் கீழ் குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுப்பதற்காக பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம் என்றும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது என்று அறிவித்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சியில் உள்ள மூத்தோரை குழந்தைகள் மையத்தை மையத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் சிறப்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்ட குழந்தைகளின் விவரங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்ட சிறப்பு செயலில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியாக சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம் உருவாக்கப்படும்.

Categories

Tech |