Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 60 நாட்களில்…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் வீட்டுவசதி துறையில் பல்வேறு திட்டங்களை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். மேலும் வீட்டுவசதி துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் முக்கிய நகரங்களுக்கு துணை நகரங்கள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். துணை நகரங்கள் அனைத்தும் மாதிரி நகரங்கள் போல் உருவாக்க நடவடிக்கை எடுக்கபடும். வீடுகளின் வரைபடத்துக்கு 60 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |