Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 62 இருக்கு…. கிராம வாசிகளுக்கு ஷாக் கொடுத்த அரசு …!!

நாடு முழுவதும் 6 ஆயிரம் ரயில் நிறுத்தங்களை கைவிட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் 62 ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது என தெரியவந்துள்ளது.

ரயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும்  குறைவாக வருவாய் உள்ள ரயில் நிலையங்களை கணக்கு எடுத்து இருக்கின்றன. அதன்படி 1728 ரயில் நிலையங்கள் நாடு முழுவதும் வருகின்றன. இந்த ரயில் நிலையங்களில் உள்ள 6000 ரயில் நிறுத்தங்கள் கை விடப் போவதாக ரயில்வே வாரியம் தற்போது அறிவித்து இருக்கின்றது. மிக குறைந்த ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம்  வருவாய் ஒரு ரயிலில் 50 பயணிகளுடன் ஏறி இரங்காத ரயில் நிலையங்களாக கணக்கிடப்படுகிறது.

ஹஜி 3 என்ற வகை ரயில் நிலையங்களாக கணக்கிடப்பட்டு, இந்த ரயில் நிலையங்களில் தான் நின்று செல்லாத அடிப்படையில் ஒரு முடிவை ரயில்வே வாரியம் எடுத்துள்ளது. புதிய கால அட்டவணை ஆண்டுதோறும் வெளியிடுவார்கள். அதன்படி இந்த ஆண்டு கால புதிய ரயில்வே கால அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த ரயில்வே கால அட்டவணை வந்தவுடன் இது உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது என்பது ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 544 ரயில் நிலையங்களில் இதுபோன்ற மிக குறைந்த வருவாய் உள்ள ரயில் நிலையங்கள் 62 ரயில் நிலையங்கள் வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள இந்த ரயில் நிலையங்களில்  ரயில்கள் நின்று செல்லாது என்பதுதான் புதிய அறிவிப்பாக தெரியவந்திருக்கிறது. பணிகள்  ரயில்கள் எல்லாம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆக மாற்றப்பட்டு பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தப்படாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது கூடுதலாக தற்போது இந்த 62 ரயில் நிலையங்கள் இணைக்கப்படுகிறது தெரியவந்திருக்கிறது.

Categories

Tech |